Tuesday, September 15, 2009

என் உணர்வே - நீ - என் உயிரே


எதிர்பார்ப்புகள் இல்லாத உறவுகள் இல்லை!
எதிர்பார்ப்புகள் மட்டுமே உறவுகள் இல்லை !

உணர்ச்சிகள் உரிமைகளாய் உருமாற -
உரிமைகள் உறவுகளை உருபெற்று எழுந்தது !

உடல் உணர்ச்சி மட்டுமே உணரப்பட்டு -
உயிரின் உணர்ச்சி உலர்ந்து விட்டதே !

உணர்வற்ற என்னை உன் பார்வையால்,
உணர்வுற செய்தாய்

துளிர்த்து நின்றேன், துள்ளி மகிழ்ந்தேன்
உயிரை உணர்ந்தேன் , உறவை உணர்ந்தேன் !

நன்றி கண்ணே ! பேசா பெண்ணே!
நீ யாரென்று யான் அறியேன் !
ஆனால் நீயே என் உறவென்று அறிந்தேன் !

No comments:

Post a Comment

No of Visitors

Followers