பண் இல்லாப் பாடலாக்கி விட்டாயே!
சிலை வடிக்கும் உளி - நீ என்று எண்ணி
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் !
சிகை இல்லாமல் என்னை சிதைத்துவிட்டு
சிறு பிள்ளை போல் சிரிப்பதேன்!
உன் செயலைக்கண்டு வெதும்பாமல்
உன் நகை கண்டு நெகிழுதடி என் மனம்!
புரிந்து கொள்ளடி பெண்ணே!
உன்னிடத்தில் நான் இழந்த இதயம் இறந்து விட்டதென்று!