Tuesday, September 15, 2009

என் உணர்வே - நீ - என் உயிரே


எதிர்பார்ப்புகள் இல்லாத உறவுகள் இல்லை!
எதிர்பார்ப்புகள் மட்டுமே உறவுகள் இல்லை !

உணர்ச்சிகள் உரிமைகளாய் உருமாற -
உரிமைகள் உறவுகளை உருபெற்று எழுந்தது !

உடல் உணர்ச்சி மட்டுமே உணரப்பட்டு -
உயிரின் உணர்ச்சி உலர்ந்து விட்டதே !

உணர்வற்ற என்னை உன் பார்வையால்,
உணர்வுற செய்தாய்

துளிர்த்து நின்றேன், துள்ளி மகிழ்ந்தேன்
உயிரை உணர்ந்தேன் , உறவை உணர்ந்தேன் !

நன்றி கண்ணே ! பேசா பெண்ணே!
நீ யாரென்று யான் அறியேன் !
ஆனால் நீயே என் உறவென்று அறிந்தேன் !

Monday, September 7, 2009




கண்டவுடன் காதல் - கனவுகளில் மோதல்
என் உயிர் கூட நீதான் - உன் நிழல் கூட நான்தான்
என்று உணர்ந்தேன் !

சொப்னமற்று சயனத்தில் இருந்த என்னை சயனமற்று
சொப்னத்தில் திளைக்க வைத்தாய்
என்னை முற்றிலுமாய் இழந்தேன் !

மெல்ல மெல்ல என்ன முற்றிலுமாய் கவர்ந்தாய்!
என் மூச்சின் காற்றே நீயென ஆனாய் !
மந்தேன் உன்னை ! இறந்தேன் பெண்ணே !

இறந்த பிறகு தான் கண்டுகொண்டேன் !
நீ என் பிராணவாயு அல்ல !
பிராணத்தை வாங்கும் விஷ வாயு என்று!

Tuesday, May 26, 2009

காதல் ஏமாற்றம்!

பாசியில்லாப் பாறையடி நான்!
பண் இல்லாப் பாடலாக்கி விட்டாயே! 
 
சிலை வடிக்கும் உளி - நீ என்று எண்ணி 
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் !
 
சிகை இல்லாமல் என்னை சிதைத்துவிட்டு 
சிறு பிள்ளை போல் சிரிப்பதேன்!  

உன் செயலைக்கண்டு வெதும்பாமல் 
உன் நகை கண்டு நெகிழுதடி என் மனம்!  

புரிந்து கொள்ளடி பெண்ணே! 
உன்னிடத்தில் நான் இழந்த இதயம் இறந்து விட்டதென்று!

Friday, May 15, 2009

நண்பனே- மறக்காதே

சிறகுகள் விரியும் நேரம்!
கனவுகள் கலையும் காலம்.

சிறகடித்து பறக்க! - இல்லை
சிறகடித்து பிரிய மறுக்கும் மனங்கள்.

பரந்த வானில் பறக்க போகிறோம்
இந்த சில இனிய நினைவுகளை
இதயத்தில் தாங்கிக்கொண்டு.

மறந்து விடாதே நண்பா!
பேசும் ஊமையாய் சொல்கிறது என் உள்ளம்.

Wednesday, April 15, 2009

college Friends


சில கனவுகள் கலைவதுஇல்லை,
சில உருவங்கள் மறைவது இல்லை,
சில உணர்வுகள் மறப்பது இல்லை,
சில சுவடுகள் அழிவது இல்லை,
அது போல-
சில நண்பர்கள் பிரிவது இல்லை.
அந்த சிலரை நினைத்து மெய் சிலிர்ப்பதா இல்லை,
பிரியும் பலரை நினைத்து அழுவதா?
புரியாத புதிராய் உள்ளது இந்த நட்பு.

Ganesh ! staying all alone!


Hey ppl let me pen down some thing about me, a cool guy having lots of friends to the enjoying every moment of Life.

Did my engineering in Computer science at Velammal! one of the famous colleges in Tamilnadu. Did my schooling in Sainik School, Amaravathi Nagar (SSA) under the Ministry of Defense,India.

About Present Feel:
Bagavath Geetha stats: u came with nothing in the beginning so u have nothing to loose at the end!
but to me: i came with nothing to this coll and school! but had a huge friends and the happy days to loose at the ends!
how does Bagavath geetha accounts for this?

No of Visitors

Followers